Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம் - எஸ்.பி.பி உடல் நிலை குறித்து சரத்குமார்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (18:40 IST)
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் சற்று முன் வெளியான மருத்துவமனை அறிக்கையில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

எஸ்பி பாலசுப்பிரமணியன் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து திரைபிரபலங்கள் , ரசிகர்கள் என அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது இது குறித்து நடிகர் சரத்குமார் தனது முகநூல் பக்கத்தில், "திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பின்னடைவு சீராகி விரைவில் குணமடைந்து நம்மை மகிழ்விக்க மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம்." என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

DNA வெற்றியால் முடங்கிக் கிடந்த அதர்வாவின் படம் ரிலீஸுக்குத் தயார்!

கைவிடபட்டதா ’96 இரண்டாம் பாகம்?’… விக்ரம்முடன் கூட்டணி போடும் இயக்குனர் பிரேம்!

பெண்களின் தயக்கமும் பயமும்தான் தவறுகளுக்குக் காரணமாக அமைகிறது… நடிகை பவானி ஸ்ரீ கருத்து!

ஸ்லீப்பர் ஹிட் DNA படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!

போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக் கொள்ளுங்கள்.. ஆளுநர் நிகழ்ச்சியைக் கண்டித்த வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments