Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒத்துக்கொள்கிறேன் சூர்யாவுக்கு நடிக்க தெரியாது என்று – ரமேஷ் திலக்கின் டிவீட்!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:12 IST)
நடிகர் சூர்யா சூரரைப் போற்று திரைப்படத்தில் வாழ்ந்துள்ளதாக நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக நேற்று வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் பலரும் சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகரான ரமேஷ் திலக் ‘ஒப்புக்கொள்கிறேன். ஆம் சூர்யா அவர்களுக்கு நடிக்க தெரியாது என்று. மனுஷன் வாழ்ந்துட்டு போய்ட்டே இருக்கார். ’ எனக் கூறி படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எல்லாம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments