Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கொடியை கையில் ஏந்தி சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (17:12 IST)
தேசிய கொடியை கையில்  ஏந்தி நடிகர் ரஜினிகாந்த் சுதந்திர தினத்தைக்கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம்  ஆகஸ்ட் 10 ஆம்  தேதி  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.

ரஜினியுடன் இணைந்து  மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  நடிப்பில், அனிருத் இசையில்,  சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம்  முதல் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று  ரூ.300  கோடி வசூலை நெருங்கி வருகிறது.

இந்த நிலையில், பட ரிலீஸுக்கு முன்பே ரஜினிகாந்த் இமயமலைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

இந்த நிலையில், நாளை சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளதால், துவாரஹாரத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த்,  ஆசிரம சுவாமிஜியுடன் இணைந்து தேசிய கொடி ஏந்தினார்.

மேலும், ஆதி பத்ரி நாத் கோயிலில் 3000 ஆண்டு கால பழமையான சுயம்பு மகாவிசஷ்ணுவையும் அவர் வழிபட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

ஓடிடி ரிலீஸ்… இந்த வாரம் எந்தந்த தளங்களில் என்னென்ன படங்கள் !

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments