Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த பின்பு யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. முன்பே கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்..!

Mahendran
வியாழன், 29 மே 2025 (16:43 IST)
குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ராஜேஷ், உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவரது மரணச் செய்தி திரையுலகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அவரது இறுதி ஊர்வலம் ஜூன் 1ம் தேதி நடைபெறும் என அவரது குடும்பம் அறிவித்துள்ளது. அவரது மகள் அமெரிக்காவிலிருந்து வந்து கொண்டிருப்பதால் இந்த ஜூன் 1ம் தேதி நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அவர் கடந்த காலத்தில் அளித்த ஒரு நேர்காணல் தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகின்றது. அதில், "மார்க்ஸின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, அவரது கல்லறையை லண்டனில் பார்த்த பிறகு, நானும் எனக்கென ஒரு கல்லறை கட்டவேண்டும் என்று முடிவு செய்தேன். முதலில் மார்பிளில் அமைத்தேன். பின்னர் அது பழுதடைந்ததால் கிரானைட்டில் மாற்றினேன். என் விருப்பப்படி சில பைபிள் வசனங்களுடன் அமைத்துள்ளேன். இறந்த பின்பு யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை" என கூறியிருந்தார்.
 
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments