Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவருக்குப் பதில் இனி இவர் – கொரோனாவால் தொலைக்காட்சி தொடர்களில் நடிகர்கள் மாற்றம்!

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (18:25 IST)
கொரோனாவுக்குப் பின் தற்போது தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ள நிலையில் நடிகர்கள் சிலர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

கொரோனாவால் நான்கு மாதங்களாக தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் நடக்காத நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஆனாலும் அதில் ஒரு சிக்கலாக பல முன்னணி நடிகர்கள் வெளி மாநிலங்களில் சிக்கியுள்ளதாலும், உடல்நிலை மற்றும் வயது காரணமாக நடிக்க முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பொன்வண்ணனுக்குப் பதில் தற்போது நிழல்கள் ரவி நடிக்க இருக்கிறார். இதை அந்த தொடரின் நாயகியான ராதிகா சரத்குமார் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் உறுதி செய்துள்ளார். இது போல மேலும் பல தொடர்களிலும் நடிகர்கள் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கார் விருது வென்ற நடிகர்ம் மனைவியுடன் மர்ம மரணம்,, ரசிகர்கள் அதிர்ச்சி,,!

ஹோம்லி லுக்கில் அனுபமா பரமேஸ்வரனின் க்யூட் லுக்ஸ்!

நடிகை ரைஸா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

கூலி படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

பிரேமலு 2 படம் தாமதமாக மமிதா பைஜுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments