Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி கொண்டாட லண்டன் பறக்கும் விஜய்!

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (19:24 IST)
நடிகர் விஜய் இந்த வருட தீபாவளி பண்டிகையை லண்டனில் கொண்டாடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, 


 
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 
 
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய தத்துவ பேச்சு வழக்கம் போலவே வைரலானது. படத்தின் பணிகள் நிறைவடைந்து வருகிய தீபாவளி  தினத்தன்று வெளியாகவுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது  கிடைத்துள்ள தகவலென்னெவன்றால், விஜய் இந்த தீபாவளியை லண்டனில் குடும்பத்துடன் கொண்டாடவிருப்பதாகவும், அங்கேயே பிகில் படத்தை பார்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments