Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நலிந்த நடிகர்களுக்காக அமைச்சருக்கு பிரபல நடிகர் எழுதிய கடிதம்!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (17:23 IST)
நலிந்த நடிகர்களுக்காக அமைச்சருக்கு பிரபல நடிகர் எழுதிய கடிதம்!
நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களை காப்பாற்றும்படி தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சருக்கு நடிகரும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நாசர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
தென்னிந்திய நடிகர்‌ சங்கத்தில்‌ திரைப்படங்களில்‌ நடிக்கும்‌ துணை நடிகர்‌, நடிகையர்கள்‌ சுமார்‌ 1500 உறுப்பினர்களும்‌ மற்றும்‌ தமிழகத்தில்‌ அனைத்து மாவட்டங்களிலுள்ள நாடக கலைஞர்கள்‌ சுமார்‌ 2000-க்கும்‌ மேற்பட்டவர்கள்‌ உறுப்பினர்களாக உள்ளனர்‌.
 
தற்போது உலகம்‌ முழுவதும்‌ கொரோனா வைரஸ்‌ பாதிப்பு காரணமாக தமிழகத்தில்‌ மார்ச்‌ மாதம்‌ முதல்‌ ஏப்ரல்‌ 14 வரை ஊரடங்கு உத்தரவு அரசு அறிவித்துள்ளது. இதனால்‌ திரைப்பட படப்பிடிப்புகளும்‌ மாவட்டங்களில்‌ நடைபெற இருந்த நாடக விழாக்களும்‌ நடைபெறாமல்‌ போனதால்‌ அதையே நம்பி இருக்கும்‌ அன்றாடம்‌ ஊதியம்‌ பெறும்‌ திரைப்படம்‌, நாடகம்‌ ஆகிய துறைகளில்‌ உள்ள கலைஞர்களின்‌ வாழ்வாதாரம்‌ மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய நிலையுள்ள நலிந்த கலைஞர்கள்‌ உட்பட அனைவரும்‌ தங்கள்‌ அடிப்படை தேவைகள்‌ கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
 
எனவே, தாங்கள்‌ இதனை கருத்திற்கொண்டு. தென்னிந்திய நடிகர்‌ சங்க உறுப்பினர்களுக்கு திரைப்படத்துறை நல வாரியம்‌ மூலம்‌ உதவி செய்ய பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்‌. மேலும்‌ இக்காலகட்டத்தில்‌ தாங்கள்‌ செய்யும்‌ பேருதவி எங்களின்‌ மனதில்‌ நீங்காத இடம்‌ பெறும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌
 
இவ்வாறு நடிகர் நாசர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற ட்ரஸ்ஸில் ரகுல் ப்ரீத் சிங்கின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சூர்யா 44 படம் எப்போது ரிலீஸ்?… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

கங்குவா தோல்விக்கு இவருதான் முக்கியக் காரணம்… கொந்தளிக்கும் ரசிகர்கள்!

ராஜமௌலியின் ஹிட் கதையை பட்டி டிங்கரிங் செய்யும் அட்லி…அடுத்த படம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments