Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெகா பட்ஜெட் மகாபாரத படத்தில் கர்ணனாக நடிக்கும் நாகார்ஜூனா

Webdunia
புதன், 24 மே 2017 (18:48 IST)
சமீபத்தில் வெளியான பாகுபலி2 படம் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூலாகி இந்திய சினிமாவில் புதிய சாதனையை பிடித்துள்ளது.


 

 
இந்நிலையில், மகாபாரத கதை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இப்படத்தை வி.ஏ.ஸ்ரீகுமார் இயக்குகிறார். இப்படத்திற்கான கதை, திரைக்கதையை பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதுகிறார்.  இந்த சரித்திர படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பல நடிகர்களும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.


 

 
இந்நிலையில், இப்படத்தில் துரியோதனின் நண்பனான கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவிடம் பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. இதை நாகார்ஜூனாவும் உறுதி செய்துள்ளார். எல்லாம் உறுதியானால் அவர் இப்படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்கவர் உடையில் போட்டோஷுட் நடத்திய பிரியங்கா மோகன்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கண்ணோடு மோதும் கண்ணாடிப்பூவே…பூஜா ஹெக்டேவின் அழகிய க்ளிக்ஸ்!

நான் யார் என்பதை மற்றவர்களின் கருத்துகள் வரையறுக்க அனுமதிக்க மாட்டேன் –அஜித்குமார் பேட்டி!

ரெய்டு நடக்கும் ஹோட்டல்கள் என்னுடையவை இல்லை… நடிகர் ஆர்யா மறுப்பு!

வார நாட்களிலும் கணிசமான வசூல்.. வெற்றியை நோக்கி செல்லும் படை தலைவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments