Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்வந்தன் பட இயக்குனருக்கு ஆடி கார் பரிசளித்த மகேஷ் பாபு

செல்வந்தன் பட இயக்குனருக்கு ஆடி கார் பரிசளித்த மகேஷ் பாபு
, செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (21:47 IST)
செல்வந்தன் பட இயக்குனர் கொரட்டலா சிவாவிற்கு, அப்படத்தின் நாயகன் மகேஷ் பாபு, ஆடி கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். 


 
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு சமீபத்தில் நடிப்பில் வெளியான படம் ‘ஸ்ரீமந்துடு’. இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்திருந்தார். கொரட்டலா சிவா இப்படத்தை இயக்கியிருந்தார். மகேஷ் பாபுவே தயாரித்திருந்தார். இப்படம் ஆந்திராவில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. 100 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. 
 
இப்படம் தமிழில் ‘செல்வந்தன்’ என்னும் பெயரில் டப் செய்து வெளியாகி தமிழ் நாட்டிலும் வெற்றி பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த மகேஷ்பாபு இப்படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவாவிற்கு போன் செய்து ஆடி ஷோரூமிற்கு வரும்படி அழைத்திருக்கிறார். என்னவென்று தெரியாமல் வந்த இயக்குனருக்கு மகேஷ்பாபு வெள்ளை நிற ஆடி காரை பரிசளித்திருக்கிறார்.
 
திடீரென அழைத்து தனக்கு ஆடி காரை பரிசாக அளித்தது, இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும் மகேஷ்பாபுவின் இந்த பரிசு அவரது அன்பையும் பெருந்தன்மையையும் காட்டுவதாக இயக்குனர் நெகிழ்ந்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil