Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை–சேலம் பசுமை வழிச்சாலை தேவையில்லாத ஒன்னு - நடிகர் கார்த்தி

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (11:58 IST)
சென்னை–சேலம் பசுமை வழிச்சாலை தேவையில்லாத ஒன்று என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிகிறது. 
 
இயற்கை வளங்களை அழித்து அமைக்க போகும் இந்த சாலைக்கு ஏன் அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ சாலை அமைத்தே தீருவோம் என்று விடாப்பிடியாக செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய நடிகர் கார்த்தி சேலம்– சென்னை பசுமை வழி சாலை திட்டம் தேவை இல்லாதது. இயற்கை வளங்களை அழித்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். ஏற்கனவே விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். இதில் இத்திட்டத்தால் பல விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என ஆவேசமாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments