Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்பி எடுத்த நடிகை கஸ்தூரி: கடுப்பாகி கண்டபடி கத்திய கார்த்தி!

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (15:45 IST)
செல்பி விவகாரத்தில் கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாத என நடிகர் கார்த்தி ஜூலை காற்றிலே இசை வெளியீட்டு விழாவில் கொந்தளித்தார்.


 
கேசி சுந்தரம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜுலை காற்றில். இந்த படத்தில் ஆனந்த் நாக்,  அஞ்சு குரியன் சம்யுக்தா மேனன், சதீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
காவ்யா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சரவணன் பழனியப்பன் தயாரித்துள்ளார். டிமல் சேவியர் எட்வெர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார்.  
 
இந்நிலையில் ஜுலை காற்றில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.
 
இந்த விழாவில் பேசுகையில் நடிகர் கார்த்தி செல்பி விவகாரம் தொடர்பாக கொந்தளித்தார் . செல்பி எடுப்பதில் விவஸ்தையே இல்லாமல் போச்சு.  அனுமதி இல்லாமல் செல்பி எடுக்கிறார்கள். முன்னாடி இரண்டு பிளாஸ், பின்னாடி இரண்டு பிளாஸ் என அடித்தால் மைக்ரான் இருப்பவர் என்ன ஆவார் என கேள்வி எழுப்பினார் 
 
முன்னதாக விழாவை தொகுத்து வழங்கிய கஸ்தூரி, கார்த்தியை பேச அழைத்த போது அவருடன் செல்பி எடுப்பது நின்று கிண்டல் செய்தார். கார்த்தியின் தந்தை சிவக்குமாரை கிண்டல் செய்து கஸ்தூரி செல்பி எடுக்க முயன்றதாக தெரிந்தது. 


 
அண்மையில் நடிகர் சிவகுமார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இரண்டு ரசிகர்களின் செல்போனை தட்டி விட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிட்டத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments