Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 68 படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (07:46 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படத்துக்கு ‘பாஸ்’ அல்லது ‘பஸ்ஸில்” என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறுத்துள்ளார்.

இப்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தில் பல நட்சத்திரங்கள் இணைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி இப்போது நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கஞ்சா கருப்பு ஏற்கனவே விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு தேசிங் பெரியசாமி படத்தில் நடந்த அதிரடி மாற்றம்…!

சிவகார்த்திகேயன் & சுதா கொங்கரா இணையும் படத்தில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்?

இதுவரை தமிழ்ப் படங்கள் வெளியாகாத நாட்டில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் வேட்டையன்!

இயக்குனர் என்னை அடித்தார்… ஆனால் நான் இயக்குனரை அடித்ததாகப் பரப்பிவிட்டார்கள் – பத்மபிரியா வேதனை!

பிரபல நடிகை சோனா வீட்டில் கத்தியோடு புகுந்து மிரட்டிய மர்ம நபர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments