Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பாரத் யாத்ரா' நிகழ்வின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஜெயராம்!

J.Durai
திங்கள், 30 செப்டம்பர் 2024 (10:56 IST)
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். திருவனந்தபுரத்தில் ஸ்ரீ கோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி நடத்துகிறது.
 
நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ஜெயராம் இந்த அசாத்திய முயற்சியின் பின்னணியில் உள்ள முழு குழுவையும் வாழ்த்தினார். மேலும், இந்த சிறந்த நோக்கத்திற்கு ஆதரவளித்த இந்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த பிரச்சாரம் அக்டோபர்6, 2024 அன்று கன்னியாகுமரியில் தொடங்கி டிசம்பர்3, 2024 அன்று புதுதில்லியில் நிறைவடைய உள்ளது.
 
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஜெயராம் தலைமை தாங்க, அவருடன் கோகுலம் கோபாலன், பிரவீன், அன்வர், அனூப், நந்தகோவிந்த் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments