Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்!

J.Durai
செவ்வாய், 23 ஜூலை 2024 (11:59 IST)
'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'வெற்றி கொடி கட்டு' என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், 'ஆட்டோகிராப்' மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். 
 
இந்நிலையில், தனது தொய்வில்லாத திரைப் பயணத்தின் அடுத்த முக்கிய மைல்கல்லாக, மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்க உள்ளார் சேரன். 
 
பெரிதும் பாராட்டப்பட்ட 'இஷ்க்' மலையாள வெற்றி படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர் இயக்கும் புதிய திரைப்படத்தில் முன்னணி மலையாள நடிகர் டொவினோ தாமஸ் உடன் முக்கிய வேடத்தில் சேரன் நடிக்கிறார். 
 
'நரிவேட்டா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அனுராஜ் மனோகரின் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 26 முதல் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. 
 
மலையாள திரையுலகில் அடியெடுத்து வைப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சேரன்......
 
முதல் முறையாக மலையாள திரைப்படத்தில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி. அனுராஜ் மனோகரின் கதையும், அதில் எனது பாத்திரமும் என்னை வெகுவாக கவர்ந்தன. டொவினோ தாமஸ் உடன் நடிப்பது கூடுதல் சந்தோஷம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்புரான் படத்துக்கு சென்னையில் அதிகக் காட்சிகள்.. மாஸ் காட்டும் மோகன்லால் & பிருத்விராஜ் கூட்டணி!

‘சிங்கம் பெத்த பிள்ளையின்னு’ உனக்குப் பாடல் எழுதினேன் –மனோஜுக்கு வைரமுத்து அஞ்சலி!

‘எம்புரான்’ மலையாள சினிமாவில் புதிய சாதனைப் படைக்கும்… விக்ரம் உறுதி!

இயக்குனர் பாரதிராஜா மகன் திடீர் மறைவு.. மாரடைப்பால் 48 வயதில் சோகம்..!

சுந்தர் சி - நயன்தாரா மோதலில் என்ன நடந்தது? குஷ்பு அளித்த விளக்கத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments