Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தான் நடித்த கேரக்டரின் பெயரை நிஜ பெயராக மாற்றி கொண்டா நடிகர் சாம்ஸ்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Siva
வியாழன், 2 அக்டோபர் 2025 (16:55 IST)
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் சாம்ஸ், இனி தனது பெயரை 'ஜாவா சுந்தரேசன்' என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
 
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2008-ல் வெளியான 'அறை எண் 305-ல் கடவுள்' திரைப்படத்தில், சாம்ஸ்   ஜாவா படித்து மென்பொருள் வல்லுநராக மாறும் இளைஞராக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் ஜாவா சுந்தரேசன்.
 
அந்த பாத்திரம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றாலும், சமூக வலைதளங்களில் மீம்ஸ்களால் ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் பிற்காலத்தில் மிகவும் பிரபலமடைந்தது. இந்த கதாபாத்திரத்திற்கெனத் தனி ரசிகர் கூட்டமும் உருவானது.
 
இந்த நிலையில், நடிகர் சாம்ஸ், இயக்குநர் சிம்புதேவனை நேரில் சந்தித்து, தனது பெயரை அதிகாரப்பூர்வமாக ஜாவா சுந்தரேசன் என்று மாற்றிக்கொள்ள அனுமதி கேட்ட காணொலி வெளியாகி உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கலையுலகில் இருக்கும் சாம்ஸ், தனக்கு பெரும் அடையாளத்தை கொடுத்த இந்த கதாபாத்திரத்தின் பெயரையே தனக்கு சூட்டிக்கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கார்ஜியஸ் கேர்ள் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

ரிலீஸ் தேதியை உறுதி செய்த பாலகிருஷ்ணாவின் ‘அகாண்டா 2’ படக்குழு!

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா… இரண்டாம் பாகத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

தேசத்துரோகியா.. தேச பக்தனா?... மம்மூட்டி & மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘பேட்ரியாட்’ பட டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments