Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருட்டுப்பயலாக மாறிய பாபி சிம்ஹா

திருட்டுப்பயலாக மாறிய பாபி சிம்ஹா

திருட்டுப்பயலாக மாறிய பாபி சிம்ஹா
, வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (12:21 IST)
இயக்குனர் சுசி கனேசன் இயக்கும், திருட்டுப் பயலே2 படத்தில், தேசிய விருது பெற்ற நடிகர் பாபிசிம்ஹா கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்


 
 
திருட்டுப்பயலே திரைப்படம் 2006ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதில் நடிகர் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா, விவேக் மற்றும் அப்பாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில், பத்து ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை சுசி கணேசன் இயக்க உள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்க செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
“உன் ரகசியம் என் கையில் இருக்கும் வரை உன் சிண்டு என் கையில்”- வித்தியாசமாக வில்லனே கதை நாயகனாக உலா வந்த தளத்தில், தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், ‘பைவ் ஸ்டார்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசன்னா வில்லனாகவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள்..! 
 
இரண்டு பேர் நடிப்பிலும், மிரட்டிலும் சிக்கிக் கொண்டு மிரள்கிற, மிரட்டுகிற ஒரு கதாநாயகியை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். முதல் பாகத்தை போல, வருகிற ஒவ்வொரு சின்ன கதாபாத்திரங்களிலும் ஏதோ ஒரு வித ‘திருட்டுத்தனத்தின் சாயல் படர்ந்திருப்பது இதிலும் தொடர்கிறது!’.   “பத்து வருஷத்துக்கு முன்னால் இந்த திருட்டுப்பயல்களின் எண்ணிக்கை வருஷத்துக்கு வருஷம் கூடுகிறதே தவிர குறைகிற வழியக் காணோம்..!. சாதாரணமாக சுற்றித் திரிந்த திருட்டுப்பயல்கள் தொழில்நுட்ப திருட்டுப்பயல்களாக பதவி உயர்வு பெற்று, சிறு சிறு குற்றங்கள் தொழில் நுட்ப குற்றங்களாக பெருகிக் கொண்டிருக்கும் வேளையில், என் கற்பனையை விட சமூக சூழலே இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு மிகப்பெரிய உந்து சக்தி” என்றார் சுசி கணேசன்.
 
மீண்டும் தொடர்ந்து “பாகம் 2, 3.... என்பது பொதுவாக கதாநாயகனை மையப்படுத்துவதாக இருந்தாலும், சில நேரங்களில் கதை கருவையும் மையப்படுத்தும்!. “கையில் சிக்கிய ரகசியத்தை வைத்து காசு பண்ணும் பின்புலம் இன்றும் என்றும் எப்போதும் பசுமையாக பொருந்துவதால், இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு கூடுதல் உத்வேகம் பிறந்தது...” என்றார்.
 
முதல் பாகத்தின் பெரும்பகுதி ஆஸ்திரிலேயாவில் படப்பிடிப்பு நடைபெற்றதை போலவே, திருட்டுப்பயலே-2-விற்கு பிரமிக்க வைக்கும் ஒரு அழகான தீவை தேடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பகுதி படப்பிடிப்பு, வெளிநாட்டில் திட்டமிடப்பட்டு பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் உணர்வு, ஒவ்வொரு திருமணமான பெண்ணையும் உருக வைக்கும் என்கிறார்கள்.
 
மற்ற கதாபாத்திரங்களுக்கு நடிகர் நடிகைகள், தொழில் வல்லுனர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவின் திருநாள் ஏமாற்றத்தை சமன் செய்த பாபு பங்காரம்