Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உயிரிழப்பு.. திரையுலகினர் இரங்கல்..!

Siva
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (07:57 IST)
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பிஜிலி ரமேஷ் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் அவர் காலமானார் என்ற செய்தி திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

யூடியூப் சேனலில் பிராங்க் வீடியோ மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான பிஜிலி ரமேஷ் சின்னத்திரையில் உள்ள சில நிகழ்ச்சிகளிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது.

இந்த நிலையில் 46 வயதான பிஜிலி ரமேஷ் குடிப்பழக்கம் காரணமாக கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோமாளி, நட்பே துணை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள பிஜிலி ரமேஷ் கடந்த சில மாதங்களாக உடல் குறைவால் இருந்தார் என்பதும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட தனக்கு யாரும் உதவி செய்யவில்லை என்று வருத்தப்பட்டு கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments