Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைக் டைசனுக்கு டப்பிங் கொடுக்கும் முன்னணி நடிகர்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (09:54 IST)
முன்னாள் உலகக் குத்துச் சண்டை சாம்பியன் மைக் டைசன் தெலுங்கில் உருவாகும் லைகர் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

தென்னிந்தியாவில் வளரும் நட்சத்திரமாக உயர்ந்து வருகிறார் விஜய் தேவாரகொண்டா. இப்போது அவர் நடிக்கும் படத்தை பூரி ஜகன்னாத் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டரை இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் தேவாரகொண்டா. இந்த படத்துக்கு லைகர் (லைன் +டைகர்) என்ற பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை இந்தியின் முன்னணி இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் விஜய் பாக்ஸராக நடிக்கும் நிலையில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிரபல குத்துச் சண்டை வீரரான மைக் டைசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. மைக் டைசன் ஏற்கனவே சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் மைக் டைசனுக்கு டப்பிங் கொடுக்க நடிகர் பாலகிருஷ்ணா சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏசிபி வீரப்பன் வேட்டைக்கு தயாராகிறார்.. 4வது கேஸ் ரெடி! - ஹிட் 4 கார்த்தியின் First Look!

இந்த ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்! இன்றைய ராசி பலன்கள் (26.05.2025)!

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments