Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விறுவிறு விஷால் - வாக்கு கேட்டு மணப்பாறை, மன்னார்குடிக்கு பயணம்

விறுவிறு விஷால் - வாக்கு கேட்டு மணப்பாறை, மன்னார்குடிக்கு பயணம்
, ஞாயிறு, 28 ஜூன் 2015 (10:06 IST)
நடிகர் சங்க தேர்தலை ஜுலை 15 நடத்த நீதிமன்றம் தடை விதித்ததை தங்களின் முதல் வெற்றியாக கருதுகிறது விஷால் தரப்பு.

இதுபற்றி பேசிய விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பிரச்சினையில் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் எங்களுக்கு உரிய பதில் அளிக்க தவறி விட்டனர்.
 
எனவேதான் வேறு வழி இல்லாமல் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தோம். தேர்தலில் வெற்றி பெறுவோம். அதன் பிறகு தேவையானதை செய்வோம்.
 
தனிப்பட்ட ஆதாயத்துக்காக தேர்தலில் நிற்கவில்லை. பதவி ஆசையிலும் போட்டியிடவில்லை. நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட வேண்டும். அதற்காகவே போட்டியிடுகிறோம்.
 
தேர்தலில் நிச்சயம் ஜெயிப்போம். அதன் பிறகு கட்டிடம் கட்டப்படும். எல்லா நடிகர்களுக்கும் அந்த கட்டிடம் மூலம் பயன் கிடைக்க ஏற்பாடு செய்வோம். 
 
மதுரையிலும் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்படும். மதுரை, கரூர், திருச்சி, புதுக்கோட்டையில் நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி உள்ளோம். விரைவில் மன்னார்குடி, மணப்பாறைக்கு சென்று நாடக நடிகர்களை சந்திக்க உள்ளோம் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil