அஜித் ரசிகர் அல்லாதவரையும் கவரும் வலிமை… போனி கபூர் உறுதி!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (09:02 IST)
அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுவான சினிமா ரசிகர்கள் என அனைவரையும் கவரும் என தயாரிப்பாளர் போனி கபுர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் மே மாதத்தில் இருந்து தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தை பற்றி பாலிவுட் இணையதள ஊடகம் ஒன்றுக்கு பேசியுள்ள போனி கபூர் ‘வலிமை படம் ஒவ்வொரு அஜித் ரசிகரையும் கவரும் விதமாக இருக்கும். சொல்லப்போனால் அஜித் ரசிகர்கள் இல்லாத பொதுவான சினிமா ரசிகர்களையும் கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

கைவிடப்பட்டதாக பரவிய வதந்தி… போஸ்டரோடு வெளியான பிரபுதேவா & வடிவேலு இணையும் படம்!

பிரபாஸின் அடுத்த பேன் இந்தியா படம் ‘ஸ்பிரிட்’… 100 நாட்களுக்குள் முடிக்கத் திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments