Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜீத் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

அஜீத் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
, புதன், 30 ஏப்ரல் 2014 (12:49 IST)
தமிழகத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கொண்டாடாமல் மற்றவர்கள் பிறந்தநாள் கொண்டாடினால் அது சினிமா நட்சத்திரங்களின் பிறந்தநாளாகவோ இல்லை அரசியல்வாதியின் பிறந்தநாளாகவோதான் இருக்கும். நாளை அஜீத்தின் பிறந்தநாள். அவர் அதனை கொண்டாடுகிறாரா தெரியவில்லை. ஆனால் ஊர் தயாராகிவிட்டது.
ரசிகர் மன்றங்களை அஜீத் கலைத்தாலும் மன்றங்கள் பெயரில் ரசிகர்கள் ஒன்றுகூடியபடியேதான் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து பரிமாற்றங்களை ஏற்கனவே அஜீத் ரசிகர்கள் தொடங்கிவிட்டனர். வழக்கமான தோரணம் கட்டுதல், பேனர் வைத்தல், போஸ்டர் ஒட்டுதல் போன்ற சமூக செயல்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆங்காங்கே கட்அவுட்டுக்கு பாலாபிஷேகமும் நடத்தப்படலாம்.
webdunia
இவை தவிர ஆன்மீக ரசிகர்கள் சார்பில் அர்ச்சனை, அன்னதானம், அலகு குத்துதல் ஆகியவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லையில் ரத்ததான முகாம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 

அஜீத் பிறந்தநாளை முன்னிட்டு அமர்க்களம் படத்தை டிஜிட்டலில் வெளியிடவும், மங்காத்தா போன்ற ஹிட் படங்களை மீண்டும் திரையிடவும் திரையரங்குகள் முன்வந்துள்ளன. ஊரே கொண்டாடும் போது தொலைக்காட்சிகள் மட்டும் சும்மா விடுமா.
webdunia

ஜெயா தொலைக்காட்சி ஆரம்பம் படத்தையும், சன் வீரம் படத்தையும் ஒளிபரப்புகின்றன. நடிகர்கள் என்றால் எதையும் செய்ய தயாராக இருக்கும் விஜய் தொலைக்காட்சியிலும் அஜீத் பிறந்ததின சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளன.
webdunia
இவை தவிர நாளை அஜீத்தை நேரடியாக சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அவரின் திருவான்மியூர் வீட்டிற்கு சென்று போலீஸிடம் தடியடி வாங்கவும் தயாராகி வருகிறார்கள் ரசிகர்கள். இவர்களுடன் நாமும் சொல்லி வைப்போம்...
 
ஹேப்பி பர்த்டே தல.
 

Share this Story:

Follow Webdunia tamil