Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேனேஜரால் ஹிட் பட வாய்ப்பை இழந்த நடிகர் அப்பாஸ்…பல ஆண்டுகளுக்கு பின்னர் வெளியிட்ட தகவல்!

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (09:52 IST)
நடிகர் அப்பாஸ் தற்போது சினிமாவில் இருந்து விலகி நியுசிலாந்து நாட்டில் செட்டில் ஆகியுள்ளார்.

இயக்குனர் கதிர் இயக்கிய, காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமான அப்பாஸ், உடனடியாக சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் மாறினார். அதையடுத்து அவருக்கு பல படங்கள் புக் ஆகின. ஆனால் அவர் விஜய் அஜித் போல ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிக்காமல் விட்டார்.

இதனால் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆக பல படங்கள் பிளாப் ஆகின. இதனால் ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்கள் வர ஆரம்பித்து கடைசியில் வாய்ப்பே இல்லாமல் போனது. இதனால் அதிருப்தியான அப்பாஸ் சில விளம்பர படங்களில் தலைகாட்டி விட்டு காணாமல் போனார்.

இந்நிலையில் ஒரு யுட்யூப் சேனலுக்கு அவர் அளித்த  நேர்காணல் ஒன்றில் தன்னுடைய சினிமா கேரியரின் பல விசயங்களைப் பற்றி பேசியுள்ளார். அதில் “முதலில் காதலுக்கு மரியாதை படம் நான் நடிக்க வேண்டியது. ஆனால் எனது மேலாளர் அந்த படம் பற்றி என்னிடம் சொல்லாமல் வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். அந்த படம் முடிந்த பின்னர்தான் எனக்கு அந்த விசயமே தெரியவந்தது” எனக் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments