ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகப் பேசினாரா அமீர்கான்?… வைரல் வீடியோ குறித்து சைபர் கிரைம் பிரிவில் புகார்!

vinoth
வியாழன், 18 ஏப்ரல் 2024 (07:43 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் கடைசி படமாக லால் சிங் சத்தா கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த திரைப்படம்  படுதோல்வி அடைந்தது. அதையடுத்து அவர் சினிமாவில் இருந்து அவர் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார்.

அதனால் 2023 ஆம் ஆண்டு அவர் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது தன்னுடைய அடுத்த படத்துக்கான பணிகளை அமீர்கான் தொடங்கியுள்ளார். அவர் நடிக்கும் அடுத்த படத்துக்கான டைட்டில் ‘சித்தாரே ஜமின் பர்’. என்று வைக்கப்பட்டுள்ளது.

இப்போது இந்தியா முழுக்க மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அமீர்கான் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரித்து பேசுவது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோ பொய்யானது என அமீர்கானின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது அந்த வீடியோ குறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸில் அவர் புகாரளித்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அமீர்கானின் செய்தித் தொடர்பாளர் “அனைத்து இந்தியர்களும் வாக்களிக்க வேண்டுகோள் விடுப்பதாக” அமீர் கான் தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

கைவிடப்பட்டதாக பரவிய வதந்தி… போஸ்டரோடு வெளியான பிரபுதேவா & வடிவேலு இணையும் படம்!

பிரபாஸின் அடுத்த பேன் இந்தியா படம் ‘ஸ்பிரிட்’… 100 நாட்களுக்குள் முடிக்கத் திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments