Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தப் படத்திலும் சோனாக்ஷி சின்காவை ஒப்பந்தம் செய்த முருகதாஸ்

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2014 (15:24 IST)
துப்பாக்கி படத்தின் இந்தி தழுவல் ஹாலிடேயில் முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்கா நடித்தார். படம் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது அடுத்தப் படத்திலும் சோனாக்ஷி சின்காவை முருகதாஸ் ஒப்பந்தம் செய்துள்ளார்.
 
பிரபுதேவா இதுவரை இந்தியில் மூன்று படங்கள் இயக்கியுள்ளார். அதில் இரு படங்களில் சோனாக்ஷி சின்கா நாயகி. தற்போது இயக்கி வரும் ஆக்ஷன் ஜாக்சன் படத்திலும் சோனாக்ஷியே நடித்து வருகிறார். முருகதாஸின் ஹாலிடேயிலும் அவர்தான் ஹீரோயின்.
இந்நிலையில் தனது அடுத்தப் படத்திலும் சோனாக்ஷியை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார் முருகதாஸ். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ இந்தப் படத்தை தயாரிக்கிறது. படம் இந்தியில் தயாராகிறதா இல்லை தமிழா, யார் நாயகன் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இந்தப் படத்துக்கு மொத்தம் நான்கு மாதங்கள் கால்ஷீட் தந்திருப்பதாகவும், மூன்று மாதங்கள் படப்பிடிப்பும், ஒரு மாதம் படத்துக்கான ரிகர்சலும் இருக்கும் என சோனாக்ஷி கூறியுள்ளார்.
 
முருகதாஸ் தற்போது விஜய் நடிக்கும் கத்தி படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என பேச்சு உள்ளது. அப்படியானால் சோனாக்ஷி நடிக்கயிருப்பது சூர்யா படத்திலா?
 
இன்னும் சில தினங்களில் விவரங்கள் தெரிய வரலாம்.

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

Show comments