பாலியல் தொழிலாளியாக நடிக்கும் பிரபல நடிகை

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (11:40 IST)
நடிகை சதா. ஒரு படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார்.

 
 
அப்துல் மஜித் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘டார்ச்லைட்’. இந்தப் படம் பாலியல் தொழிலாளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. அதற்காக படம் ஏடாகூடமாக இருக்கும் என நினைக்க வேண்டாம். பாலியல் தொழிலாளிகளின்  மறுபக்கத்தைக் காட்டும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
 
இந்தப் படத்தில், சதா ஹீரோயினாக நடித்துள்ளார். அவருடன் சேர்ந்து ‘மெட்ராஸ்’ ரித்விகாவும் பாலியல் தொழிலாளியாக  நடித்துள்ளார். உதயா, சிவஷக்தி, தினேஷ் ஆகிய புதுமுகங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அவர்களுடன் இயக்குநர்  வெங்கடேஷும் நடித்துள்ளார்.
 
இந்தப் படத்துக்காக பாலியல் தொழிலாளிகள் சிலரை நேரில் சந்தித்து, அவர்களின் கதைகளைக் கேட்டறிந்து திரைக்கதை  அமைத்துள்ளார் அப்துல் மஜித். இந்தக் கதைகளில் நிறைய ஹீரோயின்கள் நடிக்க மறுத்தபோது, கதையைக் கேட்ட உடனே ஓகே சொல்லிவிட்டாராம் சதா. இவர், கடைசியாக ‘எலி’ படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்