Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடித்து நடித்து ஜீவாவுக்கு போரடித்துவிட்டதாம்…

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (11:22 IST)
கெஸ்ட் ரோலில் நடித்து நடித்து போரடித்துவிட்டதாக நடிகர் ஜீவா தெரிவித்து உள்ளார்.

 
ஜீவா நடித்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. கமலிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஐக், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜீவாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, காமெடி வேடத்தில் நடித்துள்ளார்  சூரி. திகில் படமாக இது உருவாகியிருக்கிறது. இந்தப் படம் பற்றி ஜீவாவிடம் பேசியபோது, கெஸ்ட் ரோலில் நடிப்பது பற்றி  கேள்வி எழுப்பப்பட்டது.
 
“என்னுடைய ‘சிவா மனசுல சக்தி’ படத்தில், கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார் ஆர்யா. ஹீரோக்களுக்கு இடையே இருந்த  ஈகோவை உடைத்து, முதன்முதலில் இந்த ட்ரெண்டைக் கொண்டு வந்தது நாங்கள் தான். இப்போது, பெரும்பாலானவர்கள் கெஸ்ட் ரோலில் நடித்துவிட்டனர். இது ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும், அப்படி நடித்து நடித்து போரடித்து விட்டது”  எனத் தெரிவித்துள்ளார் ஜீவா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவில் 7 ஆண்டுகள் புறக்கணிக்கபப்ட்டேன்… விஷ்ணு விஷால் உருக்கம்!

பாட்டே இல்லாம பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த லோகேஷா இப்படி?... ரசிகர்கள் புலம்பல்!

கோடியில் சம்பளம் கேட்கிறாரா காயடு லோஹர்.. வதந்திகளை கிளப்பிவிடும் யூடியூபர்கள்..!

’ஜனநாயகன்’ பிசினஸ் திடீரென நிறுத்தப்பட்டதா? அரசியல் காரணமா?

சினிமா தயாரிக்கிறதா டிவிஎஸ் நிறுவனம்? ஹீரோ, இயக்குனர் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments