Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலுவோடு நடிக்க அஞ்சும் முன்னணிக் கதாநாயகிகள்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (15:40 IST)
நடிகை பிரியா பவானி சங்கர் இப்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

வடிவேலுவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. இந்த படத்தில் நடிக்க வடிவேலு தயங்கிய போது அவருக்கு நம்பிக்கை அளித்து நடிக்க வைத்தவர் அந்த படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர். இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் அந்தப்  படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிய போது மீண்டும் அதே கூட்டணி இணைந்தது.

ஆனால் பட உருவாக்கத்தின் போது ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து அந்த படம் கைவிடப்பட்டது. இதனால் ஷங்கரைப் பற்றி வடிவேலு பல இடங்களில் விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் இப்போது பிரச்சனை எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடி கிடையாது. ஆனால் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகையிடம் பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அது பிரியா பவானி சங்கராக இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதை பிரியா பவானி சங்கர் தரப்பு மறுத்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகைகளிடம் பேசி வருகிறார்களாம். ஆனால் யாருமே வடிவேலுவோடு நடிக்க தயாராக இல்லை என சொல்லப்படுகிறது. ஏற்கனவே வடிவேலுவுடன் நடித்து ஸ்ரேயா தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார் என்பதால் இந்த அச்சம் நிலவுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments