Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டை பற்றி சொல்கிறதா விஜய்யின் மெர்சல்?

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (18:38 IST)
விஜய் நடித்து வரும் அவரது 61 வது படத்திற்கு மெர்சல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் ஜல்லிக்கட்டு வீரர் உள்ளிட்ட மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க டைட்டில் மெர்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் நாம் முன்பே கூறியது  போல் முறுக்கு மீசையுடன் உள்ளார், மேலும், பின்பு காளை மாடுகள் வருவது போல் போஸ்டர் அமைந்துள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு சம்மந்தமாக ஒரு சில காட்சிகள் இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
இதுமட்டுமின்றி மெர்சல் டைட்டிலில் ‘ல்’ எழுத்தை கவனித்தால் மாட்டு வால் போல் வடிவமைத்துள்ளனர். கண்டிப்பாக இப்படம் ஜல்லிக்கட்டு பற்றி இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகின்றது.
 
படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை தேனாண்டாள் நிறுவனம் வெளியிட்டது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை  பிரம்மாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறது.
 
ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments