Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மகளின் அந்த முடிவுக்கு மனைவிதான் காரணம்… அபிஷேக் பச்சன் கருத்து!

vinoth
புதன், 9 ஜூலை 2025 (10:46 IST)
உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் அதை தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். அதேசமயம் விவேக் ஓபராய், சல்மான் கான் உள்ளிட்டோருடனான காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். பின்னர் கடந்த 2007ம் ஆண்டில் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகரும், அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகளும் உள்ளார். நல்லவிதமாக சென்றுக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக ஐஸ்வர்யா ராய், தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் தனியாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வப்போது இருவரும் ஒன்றாக பார்ட்டிகளில் வலம் வந்து இந்த வதந்திகளுக்கு பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அபிஷேக் பச்சன் தன்னுடைய மகள் ஆராத்யா குறித்து பேசியுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் “என் மகள் ஆராத்யா எந்த சமூகவலைதளத்திலும் இல்லை. அவர் செல்போனும் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. அதற்குக் காரணம் என் மனைவிதான். அவர்தான் என் மகளை சிறப்பாக வளர்த்து வருகிறார். என் மகள் என் குடும்பத்தின் பெருமை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீர மல்லு’ படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றிய பிரபல விநியோகஸ்தர்!

அல்லு அர்ஜுனுக்கு ஹாலிவுட் நடிகரை வில்லனாக்க முயற்சிக்கும் அட்லி.. யார் தெரியுமா?

’கல்லுக்குள் ஈரம்’ நாயகி நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சசிகுமாரின் ‘அயோத்தி’ ரீமேக்கில் நடிக்கும் தெலுங்கு ஹீரோ!

மஞ்சும்மள் பாய்ஸ் விவகாரம்.. நடிகர் சௌபின் சாஹிர் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments