Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரவ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் ஜோடி யார் தெரியுமா...?

Webdunia
பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1-இல் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர் ஆரவ். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட இவர் முதலில் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஓவியாவை காதலிப்பது போல் நடந்து கொண்டு பின் காதலிக்கவில்லை  என கூறினார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், தற்போது கடந்த சில மாதங்களாக மீண்டும் இவர்கள் காதல் மலர்ந்துள்ளதாகவும், தாய்லாந்த், மற்றும் சென்னையில் உள்ள மால்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றிய சில புகைப்படங்கள் வெளியானது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல  இயக்குநர்களால் கவனிக்கப்பட்ட ஆரவ், தன்னை தேடி வரும் திரைப்பட வாய்ப்புகளையெல்லாம் ஏற்காமல் சிறந்த கதையை தேர்வு செய்ய காத்திருந்தார். 
 
இந்நிலையில் ஆரவ் நடிக்கும் படத்தை இயக்க உள்ள இயக்குநர் விஜய்ஸ்ரீ என்பவர். இவர் இயக்கும் படத்தில், ஆரவ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இப்படத்தில் ஆரவுக்கு ஜோடியாக ஓவியா நடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
விஜய்ஸ்ரீ ஏற்கனவே சாருஹாசன் நடித்த 'தாதா 87' என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநர் இந்த படத்தின் தலைப்பு வரும்  ஆகஸ்ட் 9 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments