Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆண்டவன் கட்டளை - ரசிகர்களுக்கு முதல் மரியாதை

ஆண்டவன் கட்டளை - ரசிகர்களுக்கு முதல் மரியாதை

ஆண்டவன் கட்டளை - ரசிகர்களுக்கு முதல் மரியாதை
, வியாழன், 28 ஜூலை 2016 (18:03 IST)
மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கென்றே உருவாக்கப்பட்டது.


 


சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு புகழும், விருதும் சம்பாதித்த பின் திரையரங்கில் வெளியிட்டனர்.
 
மணிகண்டனின் இரண்டாவது படம் குற்றமே தண்டனையும் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில்தான் திரையிடப்பட்டது. விரைவில் திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.
 
விருது அதற்குப் பிறகே ரசிகர்களுக்கு விருந்து என்ற இந்த ஃபார்முலாவை தனது மூன்றாவது படத்தில் மாற்றியிருக்கிறார் மணிகண்டன். விஜய் சேதுபதி, ரித்திகா நடித்துள்ள அவரது ஆண்டவன் கட்டளை திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகிறது. அதன் பிறகே சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப உள்ளனர்.
 
கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலூனாக உயரப் பறக்குமா யுவன் சாம்ராஜ்யம்?