Webdunia - Bharat's app for daily news and videos

Install App

150 கோடி ரூபாய் வசூலில் இணைந்த ஆடுஜீவிதம்… ஓடிடி ரிலீஸ் எப்போது?

vinoth
புதன், 24 ஏப்ரல் 2024 (07:10 IST)
மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’  நாவல். இந்த நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ப்ளஸ்ஸி இயக்கியுள்ளார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு ஆடு மேய்ப்பவராக பாலைவனத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர்  வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே ஆடு ஜீவிதம் படத்தின் கதை. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், மலையாள சினிமாவில் 100 கோடி ரூபாயை விரைவாக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதையடுத்து இப்போது 150 கோடி ரூபாய் வசூலை ஒட்டுமொத்தமாக ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் மே மாதம் 10 ஆம் தேதி எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மே 10 முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments