Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘AAA’ படத்தின் ரகசியத்தை உடைத்த சிம்பு!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2017 (12:20 IST)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கம் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது அனைவருக்கு தெரியும். தற்போது நான்காவதாக ஒரு கெட்டப்பிலும் இதில சிம்பு நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிம்புவே கூறியுள்ளார்.

 
சிம்பு படத்தை பற்றி கூறும்போது, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஒரு வித்தியாசமான படம். நாங்கள் புதிதாக ஒரு முயற்சி எடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படத்தில் மூன்று மெயின் கதாபாத்திரங்கள் வருவதால் படத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து வைத்தோம்.
 
ஆனால் இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களை தாண்டி நான்காவது கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இதை நான் வெளியிட்டதற்கு ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடம் கோபம் கொள்வார் என்று நினைக்கிறேன். இருந்தாலும், இதை வெளியிட  இதுதான் சரியான நேரம். படத்தில் நான்காவது கதாபாத்திரம் உங்களுக்கு கண்டிப்பாக சர்ப்ரைஸாகவும், ரசிக்கும்படியாகவும்  இருக்கும். என்று நம்புகிறேன் என்று சிம்பு கூறினார்.

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அடுத்த கட்டுரையில்
Show comments