மிஷ்கின் என்னை ஏமாற்றிவிட்டார் - புதுமுக நடிகர் பரபரப்புப் புகார்

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (12:40 IST)
இயக்குநர் மிஷ்கின் சைக்கோ படத்தில் தன்னை நடிக்க வைப்பதாக கூறி தன்னிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக புதுமுக நடிகர் மைத்ரேயா என்பவர் பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார்.
சமூதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கதையை தனக்கே உரித்தான பாணியில் விசித்திரமான  திரைப்படங்களை இயக்குபவர் மிஷ்கின், இவர் தற்பொழுது நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து சைக்கோ என்ற படத்தை இயக்கவுள்ளார். திரில்லர் பாணியில் உருவாகவுள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யாமேனன், அதிதி ராவ், ஹைதரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர், 
 
இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் சைக்கோ படத்தில் தன்னை நடிக்க வைப்பதாக கூறி தன்னிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக புதுமுக நடிகர் மைத்ரேயா என்பவர் பரபரப்பு குற்றசாட்டை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.   
சைக்கோ படத்தில் என்னை ஹீரோவாக நடிக்கவைக்க என் அப்பா ஒரு மிகப்பெரிய தொகையை முன்பணமாக இயக்குனர் மிஷ்கினிடம் கொடுத்தார். பணம் வாங்கியதும் காலம் கடத்த ஆரம்பித்தார், கேட்கும் பொழுதெல்லாம் நிச்சயமாக நீ தான் ஹீரோ என்று சத்தியம் செய்வார். அதனால் அவர்மீது நானும் ஏன் அப்பாவும்  மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தோம். 
 
ஆனால், கடைசியில் அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளதாக கேள்விப்பட்டோம் அதைப்பற்றி அவரிடம் கேட்டபோது உன்னை வைத்து படம் எடுக்கமுடியாது, பணத்தையும் உடனடியாக கொடுக்கமுடியாது என கறாராக பதில் அளித்தார் என மைத்ரேயா தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments