Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘கார்த்தி 29’ படத்துக்காக பிரம்மாண்டமாக உருவாகும் மீனவ கிராம செட்!

vinoth
வியாழன், 5 ஜூன் 2025 (13:42 IST)
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸாகி வெற்றிப் படமாக அமைந்தது.

இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு தற்காலிகமாக ‘கார்த்தி 29’ எனப் பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியாகியுளது. அதில் கடலில் ஒரு ராட்சச கப்பல் வருவது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. படத்தில் முக்கியமானக் கதாபாத்திரங்களில் நிவின் பாலி மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்.

தற்போது இந்த படத்துக்காக ராமேஸ்வரத்தில் ஒரு மீனவ கிராமத்தை முழுக்க முழுக்க செட் அமைத்து வருவதாக சொல்லப்படுகிறது. செட் அமைக்கும் பணிகள் முடிந்ததும் படத்தின் ஷூட்டிங் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேரில் இருந்து ‘ஜெயம்’-ஐ எடுத்தாலும் தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்த ரவி மோகன்!

நடிகர்கள் அறிவாளி அல்ல..? நீங்கள் புத்திசாலியாக இருக்க வேண்டும்..! - கமல் கன்னட சர்ச்சை குறித்து ராணா கருத்து!

அன்பறிவ் சகோதரர்களை இயக்குனர்களாகத் தேர்வு செய்தது ஏன்?.. கமல் அளித்த பதில்!

விண்டேஜ் பாடல்… அழகான லொக்கேஷன்ஸ்… வித்தியாச வடிவேலு – எப்படி இருக்கு ‘மாரீசன்’ டீசர்!

ரூ. 21.26 கோடியை 30% வட்டியுடன் வழங்க வேண்டும்: நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments