தி கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் ஏ ஆர் ரஹ்மான்!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (09:01 IST)
கடந்த மே 5 ஆம் தேதி ரிலீஸான கேரளா ஸ்டோரி திரைப்படம் கடுமையான விமர்சனங்களை முற்போக்காளர்களிடம் இருந்து பெற்றது. இந்த படத்துக்கு எதிராக கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் தடை விதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டன. படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன.

இந்த படத்தை மோசமான பிரச்சார படம் என்று கமல்ஹாசன் மற்றும் அனுராக் காஷ்யப் போன்ற மூத்த கலைஞர்கள் விமர்சனங்களை வைத்தனர். ஆனாலும் இந்த படம் இந்தியா மற்றும் வேறு சில நாடுகளில் சுமார் 240 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சுதிப்டா சென் இயக்கும் அடுத்த படமான சஹாராஸ்ரீ படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் பலருக்கும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்படும் வகையில் இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு பாடல்களை இந்தி சினிமாவின் மூத்த பாடல் ஆசிரியரான குல்ஸார் எழுதுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியா… இல்லை கான்செர்ட்டா?.. குழம்பும் ரசிகர்கள்!

அந்த வார்த்தையை எல்லாம் படத்தில் வைக்க முடியாது… சென்ராயனுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்!

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments