10ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மகனைப் பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (15:11 IST)
10ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மகனைப் பாராட்டியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மூன்று குழந்தைகள். கதீஜா, ரஹிமா என்ற இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பிறகு அமீன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அமீன், மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ படத்தில் பாடகராக அறிமுகமானார். அவர் சமீபத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற அவருக்கு, நேற்று தேர்வு முடிவு வெளியானது. இதில், அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார் அமீன்.

“உன்னுடைய 10ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்ததற்கு வாழ்த்துகள் அமீன். இந்த உலகம் முழுவதும் உள்ள அறிவும் ஞானமும் உனக்காகக் காத்திருக்கின்றன” என ட்விட்டரில் பெருமையுடன் மகனை வாழ்த்தியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால், அவர் பெற்ற மதிப்பெண்கள் குறித்து அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments