Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தன்னைக் கெடுத்தவருடனேயே ஜோடிபோட்ட நடிகை

தன்னைக் கெடுத்தவருடனேயே ஜோடிபோட்ட நடிகை
, சனி, 20 மே 2017 (13:10 IST)
தன்னைக் கெடுத்த நடிகருடனேயே படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை வரலட்சுமி.



பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாக நடித்தவர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த வரலட்சுமியைத் திருமணம் செய்யும் அவர், வரலட்சுமிக்கு விருப்பம் இல்லாமல் இன்னொருவருடன் கட்டாய உறவு வைத்துக்கொள்ளச் சொல்லி நடித்திருப்பார். இவர்கள் இருவரும், தற்போது ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க  உள்ளனர்.
 
‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த இந்திரஜித், இந்தப் படத்தை இயக்குகிறார்.  கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்துக்கு ‘வர்கம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
 
இந்தப் படத்தை ஒரே நாளில் எடுத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, கடந்த 15 நாட்களாக ரிகர்சலில் ஈடுபட்டு வருகிறார்களாம். இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அப்படி ஒரே நாளில் படம்பிடிக்க முடியவில்லை என்றால், இரண்டு நாட்களுக்குள் முடிக்க பிளான் போட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிக்கு சிஸ்டம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?- வேல்முருகன் காட்டம்