Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுந்தர் சி - விஷால் - தமன்னா முப்பெரும் கூட்டணியில் அதிரடி ஆக்சன் படம்

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (21:24 IST)
கடந்த 2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான 'ஆம்பள' திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து விஷால் - சுந்தர் சி கூட்டணியில் மற்றொரு படம் உருவாக உள்ளது . இந்த படத்தில் தமன்னாவும் இணைந்துள்ளதால் இந்த படம் முப்பெரும் கூட்டணியாக கருதப்படுகிறது
 
விஷால் - தமனனா ஏற்கனவே 'கத்திச்சண்டை' என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இது வழக்கமான சுந்தர் சி டைப் படமாக இல்லாமல் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை பற்றிய மற்ற தகவல்கள்  விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ' வந்தா ராஜாவாதான் வருவேன் ' படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. அதேபோல் விஷால் தற்போது 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வரும் மார்ச் மாதத்தில் விஷால் - சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments