Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'காலா' படத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (12:31 IST)
'காலா' படத்திற்கு ஏற்பட்டுள்ள தடை குறித்து நேற்று கருத்து கூறிய ரஜினிகாந்த், 'நான் எதிர்பார்த்த அளவு எதிர்ப்பு இல்லை, இன்னும் அதிகமான எதிர்ப்பை எதிர்பார்த்தேன் என்று கூறினார். அந்த வகையில் கர்நாடகாவில் 'காலா' படம் ரிலீசுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்திலும் இந்த படத்தை தடை செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
 காலா படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சுரேந்தர் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: காலா படத்தில் திரவியம் நாடார், நாடார் சமூகம் குறித்து தவறான கருத்துகள் உள்ளதாகதாகவும், தவறான கருத்துகளை நீக்கும் வரை காலா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால் இதற்கு முன் பல படங்களுக்கு இதுபோன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் சென்சார் ஆன ஒரு படத்தை தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கிலும் அதேபோன்ற தீர்ப்பு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் எங்க கம்பெனிக்குதான் சொன்னார்- கமல் பகிர்ந்த சீக்ரெட்!

மோடி சாதிகளை ஒழிச்சிட்டாரே? ஏன் பிராமணர்களாய் இருக்கீங்க? - ’புலே’ திரைப்பட பிரச்சினையில் இயக்குனர் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments