Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா-செல்வராகவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Webdunia
வியாழன், 24 மே 2018 (14:17 IST)
பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.
 
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு திடீர் மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் எடிட்டராக  பிரசன்னா ஜி.கே. ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென பிரசன்னாவுக்குப் பதிலாக பிரவீன் கே.எல். எடிட்டராக நியமிக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. எடிட்டர் பிரவீன் கே.எல் ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்பட பல படங்களை எடிட் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து படக்குழுவினர் தெரிவிக்கவில்லை.
 
சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, ஜெகபதிபாபு, இளவரசு, பாலாசிங், ராம்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘45 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் விவாதித்தக் கதை…’ ‘தக்லைஃப்’ குறித்து கமல் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

வசூல் சாதனைப் படைத்த மோகன்லாலின் ‘எம்புரான்’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘வேலை செய்வதுதான் எனக்குப் போதை’… ஏ ஆர் ரஹ்மான் பெருமிதம்!

ரஜினி கூட நடிக்க என் அப்பா ஒப்புக்கொள்ளவில்லை.. கமல் தான் பெரிய ஹீரோன்னு நினைச்சேன்: குஷ்பு

கார்த்திக் சுப்புராஜ் சொன்ன சூப்பர் கதை.. வேண்டாம் என சொல்லி ‘கங்குவா’ குழியில் விழுந்த சூர்யா..!

அடுத்த கட்டுரையில்
Show comments