சின்னத்திரை சீரியல்களை இயக்கியவரும், திரைப்பட இயக்குனருமாக இருந்த எஸ்.என்.சக்திவேல் இன்று காலமானார்.
90களில் தொலைக்காட்சியின் வருகையின்போது தமிழக மக்களிடையே மெகா சீரியல்கள் அதிக வரவேற்பை பெற்று பிரபலமாகின. அப்படி பிரபலமான காமெடி சீரியலான சின்ன பாப்பா பெரிய பாப்பாவை இயக்கியவர் எஸ்.என் சக்திவேல். ஸ்ரீ ப்ரியா, நிரோஷா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த சீரியல் அப்போது மிக பிரபலம்.
இந்த சீரியல் மூலமாக பிரபலமடைந்த இயக்குனர் எஸ்.என்.சக்திவேல் கடந்த 2015ம் ஆண்டில் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற முழுநீள காமெடி படத்தையும் இயக்கினார். பின்னர் பட்ஜெட் குடும்பம் என்ற சீரியலையும் இயக்கினார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை எஸ்.என்.சக்திவேல் காலமான செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு தலைமுறையினரை சீரியல் மூலமாக சிரிக்க வைத்த அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Edit by Prasanth.K