நல்ல விமர்சனம்… ஆனால் எதிர்பார்த்த வசூல் இல்லை- 83 படத்தின் அதிர்ச்சி வசூல் நிலவரம்!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (09:41 IST)
டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ள 83 படம் வசூலில் பெரிதாக ஜொலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக உலக கோப்பையை கடந்த 1983-ஆம் ஆண்டு வென்ற நிலையில் இந்த நிகழ்வை மையமாக வைத்து படம் ஒன்று உருவாகி உள்ளது. கடந்த 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த திரைப்படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் தமிழ் நடிகர் ஜீவா நடித்துள்ளார். நேற்று வெளியான இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று ஓடி வருகிறது.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் வசூல் செய்யவில்லை என சொல்லப்படுகிறது. முதல் நாள் வசூல் சுமார் 13 கோடி ரூபாய் அளவுக்குதான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற சூர்யவன்ஷி மற்றும் புஷ்பா ஆகிய படங்கள் இந்த படத்தை விட அதிகமாக வசூலித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments