“இதான்யா தலைவரு….” ரஜினிகாந்த் பற்றி கார்த்திக் சுப்பராஜின் நெகிழ்ச்சி ட்வீட்!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (09:30 IST)
கன்னடத்தில் உருவான சார்லி 777 திரைப்படத்தை தமிழில் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் வெளியிட்டது.

கன்னடத்தில் கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்‌ஷித் ஷெட்டி நடித்து உருவான படம் “777 சார்லி”. ஒரு வளர்ப்பு நாயை மையமாக கொண்ட இந்த படம் கடந்த ஜூன் 10ம் தேதி வெளியான நிலையில் விமர்சன அளவிலும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்த படத்தை சமீபத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பார்த்துள்ளார். இந்த படத்தை பார்த்ததும் கடந்த ஆண்டு தான் ஆசையாக வளர்த்த நாய் இறந்து போனதை நினைத்து கதறி அழுதுள்ளார் பசவராஜ் பொம்மை. முதல்வர் கதறி அழுத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையடுத்து இப்போது ரஜினிகாந்த் இந்த படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளதாக ரக்‌ஷித் ஷெட்டி பதிவு செய்துள்ளார். அதில் “இந்த நாளின் சிறப்பான தொடக்கம்.  ரஜினி சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் நேற்றிரவு சார்லி படத்தைப் பார்த்துள்ளார். படத்தின் தரம் மற்றும் உருவாக்கம் பற்றி பாரட்டிப் பேசினார். க்ளைமேக்ஸ் பற்றி மிகவும் சிலாகித்து பேசினார்” எனப் பதிவு செய்துள்ளார்.

ரக்‌ஷித்தின் இந்த ட்வீட்டைப் பகிர்ந்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் “இதுதான் நம் தலைவர். நல்ல படங்களையோ நல்ல கலைஞர்களையோ பாராட்ட அவர் என்றுமே தயங்கியதில்லை. லவ் யூ தலைவா. படத்தின் வெற்றிக்கும் படக்குழுவினருக்காகவும் சந்தோஷமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. அஜித் ரசிகர் மன்றத்தை கலைச்சதுக்கான காரணம்

நேரம் பார்த்து காத்திருந்த ரஜினி! தட்டி தூக்கிட்டாருல.. யாரும் எதிர்பார்க்காத விஷயம்

யோகிபாபு ஒரு இன்ஸ்டால்மென்ட் நடிகர்.. புரமோஷன் விழாவில் கலாய்த்த கிச்சா சதீப்..!

துப்பாக்கி கொடுத்த விஜய்கூட சும்மா இருக்காரு.. சிவகார்த்திகேயனை பொளக்கும் ரசிகர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments