Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாரத்தில் வெளியாக உள்ள 7 தமிழ் படங்கள்

Sinoj
புதன், 24 ஜனவரி 2024 (14:46 IST)
தமிழ் சினிமாவில்   குடியரசு தினத்தை முன்னிட்டு  இந்த வாரத்தில் மட்டும்  7 படங்கள்  வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவின் இளம் நடிகர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் புளூ  ஸ்டார். இப்படத்தை இயக்குனர் எஸ். ஜெயகுமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேசன் மற்றும் நீலம் புரடக்சன் தயாரித்துள்ளன.

இப்படம் ஜனவரி 25 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு   இந்த வாரம் தியேட்டரில் வெளியாகவுள்ளது.

அதேபோல் ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, கிஷன் தாஸ் ஆகியோர் நடிப்பில், கோகுல் இயக்கத்தில்  உருவாகியுள்ள  சிங்கப்பூர் சலூன் படமும் நாளை ரிலீசாகிறது.

இப்படங்களுடன் போட்டியாக முடக்கறுத்தான்,. தூக்குதுரை, ஆகிய  4 படங்கள் நாளை வெளியாகின்றன.

நாளை மறுதினம், த.நா, நியதி,  நடன இயக்குனர் தினேஷ் மற்றும் யோகிபாபு  இணைந்து நடித்துள்ள லோக்கல் சரக்கு ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளன.

இதனால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments