Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாண பேச்சுக்கே இடமில்லை... 5 பேருக்கு மனைவியாக வாழ்ந்துவிட்டு அல்வா கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (19:29 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
 
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.
 
சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் ஸ்ருதி ஹாசன் இதுவரை 5 நபருடன் காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பின்னர் பிரிந்துவிட்டார். 
 
ஆரம்பத்தில் லண்டனை மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்து பிரிந்தார். அதன் பின்னர் விளம்பர படங்களில் நடித்த போது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து அவரை பிரிந்தார். அதன் பின்னர் ஓ மை பிரண்ட் படத்தில் நடித்த போது நடிகர் சித்தார்த்தை காதலித்து பின்னர் பிரேக்கப் செய்தார். 
 
அதன் பிறகு தெலுங்கு நடிகர் நாகா சைதன்யாவை ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது காதலித்து அவரையும் கழட்டிவிட்டார்.  அதன் பின்னர் தற்போது டூடுல் ஆர்ட்டிஸ்ட் சாந்தனு ஹசாரிக்கா என்பவரை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

தனுஷின் ‘ராயன்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து ஒரு கானா பாடலா?

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி நயன்தாராவா? அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!

கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்… கருணாஸ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments