Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முத்தத்துக்கு 36 டேக்கா? சேச்சே...

முத்தத்துக்கு 36 டேக்கா? சேச்சே...
, திங்கள், 6 ஜூலை 2015 (14:27 IST)
த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் மனிஷா யாதவை முத்தமிடும் காட்சியில் நடிக்க தடுமாறிய ஜி.வி.பிரகாஷ் 36 டேக்குகள் வாங்கியதாக அப்படத்தின் இயக்குனர் கூறியிருந்தார். இது பற்றி ஜி.வி.பிரகாஷிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்தவர், "அந்த முத்தக் காட்சிக்கு நான் பொறுப்பில்லை. முழுக்க முழுக்க இயக்குனர்தான் பொறுப்பு. அந்த முத்தக் காட்சிக்கு மட்டும் அத்தனை டேக்குகள் வாங்கவில்லை. அதனுடன் இணைந்து சில காட்சிகள் வரும். அதற்கும் சேர்த்துதான் அத்தனை டேக்குகள் ஆனது" என்றார்.
 
இந்த முத்த சர்ச்சை இத்துடன் ஓயவில்லை. முத்தம் கொடுத்த மாயக்காரி என்ற பாடல் முழுக்க மனிஷா யாதவ் ஜி.வி.பிரகாஷுக்கு முத்தம் தந்து கொண்டேயிருக்கிறார்.
 
சென்சார் கத்திரியை மீறி இந்த முத்தங்கள் திரைக்கு வருமா?

Share this Story:

Follow Webdunia tamil