30 கோடி குறைக்கப்பட்ட ராம்சரண் படத்தின் பட்ஜெட்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (17:40 IST)
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் பட்ஜெட் 170 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாம்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இந்நிலையில் கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா உடனான பிரச்சனைகளை முடித்துவிட்டு ஷங்கர் ராம்சரண் தேஜாவின் படத்தை தற்போது தொடங்க உள்ளார்.

இந்த படத்துக்கு ஒட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் திட்டமிட்டு கொடுத்துள்ளார் ஷங்கர். ஆனால் அதில் தேவையற்ற மற்றும் குறைக்கக் கூடிய செலவுகளை குறைத்து 170 கோடி ரூபாய்க்குள் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் தில் ராஜு. வழக்கமாக ஷங்கர் சொல்லும் பட்ஜெட்டை விட அதிகமாகவே செல்வை இழுத்துவிடுவார். ஆனால் அவரையே ஆதிக்கம் செலுத்தும் விதமாக தில் ராஜு இருக்கிறார் என பேச்சுகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை காஜல் அகர்வால் மருத்துவமனையில் அனுமதியா? என்ன நடந்தது?

கார் ரேஸ் சீசன் முடிந்தது! மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் AK! - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ‘eye candy’ புகைப்படங்கள்… அசத்தல் ஆல்பம்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் இழுக்கும் எஸ்தர் அனிலின் புகைப்படங்கள்!

ட்யூட் படத்தின் மூலம் 35 கோடி ரூபாய் லாபம்… ரிலீஸுக்கு முன்பே அறிவித்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments