Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3டி கண்ணாடிக்கு கட்டணம் - கோச்சடையான் ஓடிய திரையரங்குக்கு சீல்

3டி கண்ணாடிக்கு கட்டணம் - கோச்சடையான் ஓடிய திரையரங்குக்கு சீல்
, வியாழன், 12 ஜூன் 2014 (11:24 IST)
இந்த செய்திக்கு போகும்முன் திரையரங்குகளின் கோல்மால் கொள்ளைகள் குறித்து சிறிது பார்க்க வேண்டும்.
 
தமிழக அரசு 2011-ல் அறிவித்த கேளிக்கை வரிவிலக்கை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் வரிவிலக்குக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி தெனாலிராமன், என்னமோ ஏதோ படங்களுக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டது. 
கோச்சடையான் வெளியாவதைத் தொடர்ந்து மே இரண்டாவது வாரத்தில் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டு கோச்சடையானுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதனை எதிர்த்து முறையீடு செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கேளிக்கை வரிவிலக்கு அளித்தது சரிதான் என்றும் வரி விலக்கு அளித்ததால் வருமான வரித்துறையோ, திரையரங்குகளோ கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.
 
அதாவது கேளிக்கை வரியை திரையரங்குகள் பொதுமக்களிடம் வசூலிக்கக் கூடாது. ஆனால் சென்னை தேவி திரையரங்கு போல் ஒன்றிரண்டு திரையரங்குகள் மட்டுமே கேளிக்கை வரியை பொதுமக்களிடம் வசூலிக்கவில்லை. மற்ற அனைத்து திரையரங்குகளும் கேளிக்கை வரிச் சலுகை அறிவித்தும் கேளிக்கை வரியான 30 சதவீதத்தை பொதுமக்களிடம் வசூலித்தன. கோச்சடையான் மட்டுமின்றி வரி விலக்கு அளிக்கப்பட்ட அனைத்துப் படங்களின் விஷயத்திலும் திரையரங்குகள் இப்படிதான் பொதுமக்களின் பாக்கெட்டில் கொள்ளையடிக்கின்றன. 
webdunia
மேலும், கோச்சடையான் படத்தின் 3டி வெர்சனை திரையிட்ட திரையரங்குகள் 3டி கண்ணாடிக்கு வாடகையாக முப்பதும் நாற்பதும் ரூபாய்கள் பொதுமக்களிடம் வசூலித்தன. 3டி கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். அங்கேயும் திரையரங்குகள் தங்கள் கொள்ளையை தொடர்ந்தன.
 
புதுச்சேரியில் இப்படி 3டி கண்ணாடிக்கு கட்டணம் வசூலித்த பாலாஜி திரையரங்கு மே இறுதியில் சீல் வைக்கப்பட்டது. பிறகு இந்த மாதம் 2 -ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் வருவாய்த் துறையினர் மீண்டும் இந்த செவ்வாய்க்கிழமை திரையரங்கை மூடி சீல் வைத்தனர்.
 
கேளிக்கை வரி படம் பார்க்க வருகிற பொதுமக்களிடமிருந்துதான் வசூலிக்கப்படுகிறது. அதற்கு விலக்கு அளிக்கும் போது அந்தப் பலன் கேளிக்கை வரி செலுத்தும் பொதுமக்களுக்குதான் சென்று சேர வேண்டும். ஆனால் திரையரங்குகளும், விநியோகஸ்தர்களும் பொதுமக்களுக்கு சேரவேண்டிய பணத்தை தாங்களே பங்குப் போட்டுக் கொள்கின்றனர். இந்த மோசடியை இதுவரை தமிழக அரசு அதிகாரிகள் தட்டிக் கேட்டதில்லை. திரையரங்குகளின் மோசடி விஷயத்தில் தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கோமா நிலையில் இருப்பது வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது.
 

Share this Story:

Follow Webdunia tamil