Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2017 விக்ராந்த் ஆண்டு...?

2017 விக்ராந்த் ஆண்டு...?
, சனி, 10 டிசம்பர் 2016 (16:46 IST)
பல படங்களில் ஹீரோவாக நடித்தும் கிடைக்காத பெயர் விக்ராந்துக்கு சுசீந்திரனின் பாண்டிய நாடு படம்தான் பெற்றுத் தந்தது. இதில் நாயகனின் நண்பனாக ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார்.

 
படங்கள் இல்லாமல் வீட்டிலிருக்கும் விக்ராந்துக்கு சுசீந்திரனே மீண்டும் மறுவாழ்வளித்துள்ளார். அவர் இயக்கும் புதிய படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக விக்ராந்த் நடித்து வருகிறார்.
 
இதையடுத்து சுசீந்திரன் கதை, வசனத்தில் உருவாகும் வெண்ணிலா கபடிக்குழு 2 படத்தில் நடிக்க உள்ளார். அத்துடன் சமுத்திரகனி இயக்கும் படம், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என்று தொடர்ந்து கைவசம் படங்கள் குவிந்து வருகின்றன.
 
சென்ற காலத்திற்கும் சேர்த்து வருங்காலத்தில் வச்சு செய்ங்க... ஆல் தி பெஸ்ட்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரையரங்கில் தேசியகீதம்... விதிமுறையில் நீதிபதிகள் திருத்தம்